×

சடையம்பட்டி கிளை நூலகத்தில் 57வது தேசிய நூலக வாரவிழா

பொன்னமராவதி, நவ.21: பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி கிளை நூலகத்தில் 57வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சடையம்பட்டி கிளை நூலகத்தின் சார்பில் 57 வது தேசிய நூலக வார விழா நவம்பர் 14 ம் தேதி முதல் நவம்பர் 20 வரை கொண்டாடப்பட்டது. இதில் நூலகத்தின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கதை கூறுதல் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சடையம்பட்டி நூலகர் ஜேசுராஜ், சடையம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தவமணி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post சடையம்பட்டி கிளை நூலகத்தில் 57வது தேசிய நூலக வாரவிழா appeared first on Dinakaran.

Tags : 57th National Library Week ,Sadiyampatti Branch Library ,Ponnamaravati ,Sadayambatti Branch Library ,57th National Library Week Celebration ,Sadayampatti Branch Library ,Ponnamaravathi, Pudukottai District ,Dinakaran ,
× RELATED பொன்னேரியில் 57வது தேசிய நூலக வார விழா: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு