×

மணக்கரை அரசு பள்ளியில் மகிழ் முற்றம் அமைப்பு துவக்கம்

ஜெயங்கொண்டம், நவ.20: தமிழக கல்வி அமைச்சர் அறிவிப்பின் படி ஜெயங்கொண்டம் அருகே மணக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் \”மகிழ் முற்றம்\” அமைப்பு தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் கயல்விழி தொடங்கி வைத்து மாணவர்களின் ஆளுமைப் பண்புகள், மாணவர்களின் கற்றல் மேம்பாடு, விடுப்பு எடுப்பதை குறைத்தல், தலைமை பன்புகளை வளர்த்து கொள்ளுதல், அணைவருக்கும் சம வாய்ப்பு, மாணவர் களின் சேர்க்கையை அதிக படுத்துதல், சுற்றுப்புற தூய்மை பற்றியும், அமைப்பின் நோக்கங்கள் பற்றியும் கூறப்பட்டது. குறிஞ்சி குழுவிற்கு பரணிதாஸ், முல்லை குழுவிற்கு கீர்த்தனா, மருதம் குழுவிற்கு கேசவன், நெய்தல் குழுவிற்கு பிரதாப், பாலை குழுவிற்கு சுவராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆசிரியர் அய்யாக்கண்ணு செய்திருந்தார்.

The post மணக்கரை அரசு பள்ளியில் மகிழ் முற்றம் அமைப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Happy Yard System ,Manakarai Government School ,Jayangondam ,Tamil Nadu ,Education Minister ,Furtam'' ,Manakarai Panchayat Union Primary School ,Kayalvizhi ,
× RELATED பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு கூட்டம்