×

மயிலாடுதுறையில் ஒன்றிய கழக செயலாளர் மூவலூர் மூர்த்தி இல்ல திருமண விழா 3 அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை, நவ.21: மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மூவலூர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் 3 அமைச்சர்கள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான மூவலூர் மூர்த்தி, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி இவர்களின் மகன் எம்.முகுந்தன்- பி.விஜயபாரதி ஆகியோரின் திருமண விழா மயிலாடுதுறை சிக்னேச்சர் திருமண மஹாலில் 19ம் தேதி (நேற்று) நடைபெற்றது. திருமண விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், எம்பி சுதா, மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதாமுருகன், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

The post மயிலாடுதுறையில் ஒன்றிய கழக செயலாளர் மூவலூர் மூர்த்தி இல்ல திருமண விழா 3 அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Muvalur Murthy ,house ,West Union League ,West Union ,DMK ,Union Committee ,President ,Muvallur ,Union ,Murthy House ,Ceremony ,
× RELATED மயிலாடுதுறை நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்