×

டேக்வாண்டோ போட்டியில் தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் பள்ளி மாணவர் மாவட்ட அளவில் முதலிடம்

கரூர், நவ. 21: டேக்வாண்டா போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவருக்கு மலர் மெட்ரிக் பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன்  சுஜித் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றார். அவருக்கு பள்ளியில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி மாணவனை பாராட்டினர். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர் சக்திவேல், ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம், ஆங்கில ஆசிரியர் மணிகண்டன் அறிவியல் ஆசிரியர் அருண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post டேக்வாண்டோ போட்டியில் தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் பள்ளி மாணவர் மாவட்ட அளவில் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Tanthonrimalai Malar Matric School ,Karur ,Malar Matric School ,Bank Subramanian ,Thanthonrimalai Malar ,Tamil Nadu School Education Department ,Thanthonrimalai Malar Matric School ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகராட்சி பகுதி வழியாக...