சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18% ஜிஎஸ்டி வரியை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தற்போது அது அமலுக்கு வந்துள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சிறு வணிகத்தை அழிக்கும் முயற்சியாக இந்த வரி விதிப்பு அமையும். பலவிதமான வரி உயர்வுகளால் ஏற்கனவே பல இன்னல்களை வணிகர்கள் சந்தித்து வரும் நிலையில் மக்கள் வாழ்வதற்கு கூட வரி விதிப்பார்கள் போல உள்ளது. வணிகர்களை பாதிப்பிற்குள்ளாகும் வாடகைக்கு 18%ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும். வணிகர்களுக்கு எதிரான இந்த வரிவிதிப்பை திரும்ப பெறாவிட்டால், ஒன்றிய, மாநில அரசுகளை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாக போராட்டங்கள் நடைபெறும்.
The post கடை வாடகைக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும்: வியாபாரிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.