- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
- துணை
- தஞ்சாவூர்
- துணை-
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- ஆளுநர்
- தமிழ்
- தமிழ்நாடு
- சிதம்பரம்
- மொழியியல் உயர் கல்வி மையம்
- அண்ணாமலை பல்கலைக்கழகம்
- துணை வேந்தர்
- தின மலர்
தஞ்சாவூர்: டிச.12ம் தேதியோடு பதவி காலம் முடியும் நிலையில் தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் தமிழக கவர்னரால் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் மொழியியல் உயர்படிப்பு மையத்தின் பேராசிரியாகவும், 28 ஆண்டுகளாக கல்வித்துறையில் அனுபவம் நிறைந்தவராகவும் இருந்த வி.திருவள்ளுவனை(59) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2021 டிச.11ம் தேதி, தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக துணைவேந்தராக நியமித்தார். இதையடுத்து 2021 டிச. 13ம் தேதி திருவள்ளுவன் தமிழ் பல்கலை கழகத்தின் 13வது துணைவேந்தராக பொறுப்பேற்றார்.
இவரது பதவி காலம் மூன்று ஆண்டுகள். டிசம்பர் 12ம் தேதியோடு இவரது துணைவேந்தர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் நேற்று தமிழக கவர்னரின் செயலாளர் கிர்லோஸ்குமார், ‘‘விசாரணையை முன்னிறுத்தி பணியிடை நீக்கம்’’ செய்வதாக கூறி திருவள்ளுவனை சஸ்பெண்ட் செய்து அதற்கான உத்தரவு நகலை அனுப்பினார். இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற துணைவேந்தர் திருவள்ளுவனிடம், அதற்கான உத்தரவு நகலை அங்குள்ளவர்கள் வழங்கினர். இதையடுத்து தஞ்சாவூர் வந்த துணைவேந்தர், தனது குடியிருப்பில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டு சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றார். தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் எதற்காக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
கடந்த நவ.18ம் தேதி தமிழ் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 14வது பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சென்ற நிலையில் ஒரு மாதம் கழித்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றில் துணைவேந்தர் யாரும் இப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதில்லை. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 40 அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு தகுதி காண் பருவத்திற்கு அனுமதி வழங்கியது, இலங்கையில் பன்னாட்டு பயிலரங்க த்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்ற கவர்னரின் அறிவுரையை மீறி அனுமதி வழங்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் துணைவேந்தர் மீது உலவி வருகிறது.
The post தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.