×
Saravana Stores

பழங்கால கார் கண்காட்சி, அணிவகுப்பு

கோவை: கோவை விழாவின் 17-வது பதிப்பு நேற்று தொடங்கியது. வருகிற 1ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக பழங்கால கார் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு ரேஸ்கோர்ஸில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் நேற்று நடந்தது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில், செவர்லெ, மெர்சிடஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், போர்டு, அம்பாசிடர், பத்மினி, வோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தன. கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த கார் பிரியர்கள் தங்களது பழங்கால கார்களை கொண்டு வந்திருந்தனர்.

இந்த கண்காட்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதில், 1931ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரையிலான கார்கள் பங்கேற்று கோவை சாலைகளில் அணிவகுத்து சென்றன. இதனை மக்கள் ஆர்வமுடன் ரசித்து பார்த்தனர். இதில், மொத்தம் 40 கார்கள் பங்கேற்றன.

இந்த கார்கள் லட்சுமி மில் அர்பன் சென்டரில் பொதுமக்கள் காட்சிக்காக மாலை 5 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. இதனை பலர் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்து சென்றனர். இதில், 1960ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட செவர்லெ வகை கார் அந்த காலத்திலேயே ஆட்டோமேட்டிக் கியர் கொண்டது. இடது புறம் ஸ்டீயரிங் கொண்ட அந்த கார் அணிவகுத்து சென்றபோது அனைவரையும் கவர்ந்தது.

The post பழங்கால கார் கண்காட்சி, அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Antique Car Show, Parade ,Coimbatore ,Coimbatore Festival ,Cosmopolitan Club ,Racecourse… ,Dinakaran ,
× RELATED சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட்...