- தயவு அய்யப்பா
- மோதி காலெஜ்
- தஞ்சாவூர்
- கும்பகோணம்
- வான்
- மோதி
- ஐயப்பன்
- மதுசியா
- தஞ்சாவூர் மாவட்டம்
- திருவிடைமரத்தூர் தலுகா
- தெப்பெருமநல்லூர்
- வடக்கு தெரு
- அஜுர்
- பிரிதபம்
- வான் மோதி கல்லூரி
கும்பகோணம்: தஞ்சாவூர் அருகே ஐய்யப்ப பக்தர்கள் வந்த வேன் மோதி தனியார் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று பலியானார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, தேப்பெருமாநல்லூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னையன் மகள் மதுசியா (20). அசூரில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவர், நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு ஒரு வேனில் திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்திற்கு தரிசனம் செய்வதற்கு கும்பகோணம் அடுத்த செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கல்லூரிக்கு சென்ற மாணவி மதுசியா இருசக்கர வாகனத்தின் மீது ஐயப்ப பக்தர்கள் வேன் மோதியது.
இதில் மாணவி மதுசியா பலத்த காயம் அடைந்தார். தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி மதுசியாவை மீட்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவி மதுசியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தஞ்சாவூர் அருகே பரிதாபம் ஐயப்ப பக்தர்கள் வேன் மோதி கல்லூரி மாணவி பலி appeared first on Dinakaran.