×
Saravana Stores

என் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது; காங்கிரசில் சேர்ந்து எம்எல்ஏ ஆன மனைவிக்கு பகுஜன் மாஜி எம்.பி தடை

பாலகாட்: மத்தியப்பிரதேசத்தில் தனது மனைவியான காங்கிரஸ் எம்எல்ஏ தனது புகைப்படங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் பகுஜன் சமாஜ் எம்பி அறிவுறுத்தி இருக்கிறார். மத்தியப்பிரதேசத்தின் பாலகாட் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ அனுபா முஞ்சாரே. இவரது கணவர் கான்கர் முஞ்சாரே பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி. இந்நிலையில் இருவரும் வேறுவேறு கொள்கைகளை கொண்டவர்கள் என்பதால் மக்களவை தேர்தலின்போது எம்எல்ஏ அனுபாவை வீட்டில் இருந்து வெளியேறுமாறு கான்கர் கூறியிருந்தார்.

இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அனுபாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு இடங்களில் அவருக்கு பேனர்கள் வைக்கப்பட்டது. அப்போது அவர் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்னாள் எம்பி கான்கர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘இருவரும் வேறு வேறு கட்சியை சேர்ந்தவர்கள். எனது புகைப்படத்தை எப்படி பயன்படுத்தலாம்? அவரது நிகழ்ச்சியில் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. அவரது நிகழ்ச்சியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே எனது புகைப்படத்தை பயன்படுத்துவது ஆட்சேபனைக்குரியது. இந்த முறை அவரை விட்டுவிடுகிறேன். இனியும் இதுபோன்ற நடவடிக்கையை அவர் தொடரக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post என் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது; காங்கிரசில் சேர்ந்து எம்எல்ஏ ஆன மனைவிக்கு பகுஜன் மாஜி எம்.பி தடை appeared first on Dinakaran.

Tags : Bahujan ,Congress ,MLA ,Bahujan Samaj ,Congress MLA ,Madhya Pradesh ,Anupa Munjare ,Balaghat ,Kankar Munjare ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...