- அதானி
- வங்காளம்
- டாக்கா
- அதானி பவர் கம்பனி
- கோடா, ஜார்கண்ட்
- அதானி குழு
- அதானி மின் உற்பத்தி நிலையம்
- ஷேக் ஹசினா
- தின மலர்
டாக்கா: ஜார்க்கண்ட் மாநிலம், கோடாவில் அதானி பவர் நிறுவனத்தின் 1234.4 மெ.வா. மின் உற்பத்தி ஆலை உள்ளது. இது முற்றிலும் அதானி குழுமத்துக்கு சொந்தமான துணை நிறுவனம். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சியில் அதானி மின் உற்பத்தி ஆலையில் இருந்து வங்கதேசத்துக்கு மின் விநியோகம் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மின்சாரம் வாங்குவதற்கு இந்தியாவின் அதானி குழுமம் உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் முந்தைய அரசால் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த விசாரணையை புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசு அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக வங்க தேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி(கோடா) பிஐஎப்பிசிஎல் 1234.4 மெ.வா நிலக்கரியால் இயக்கப்படும் மின் உற்பத்தி ஆலை உள்பட 7 பெரிய மின் உற்பத்தி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் குறித்து கமிட்டி ஆய்வு செய்து வருகிறது. இதில் ஒரு சீன நிறுவனமும் அடங்கும். சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு மாறாக இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது மறு ஆய்வு செய்யப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post அதானி நிறுவன மின் ஒப்பந்தம் வங்கதேசம் மறு ஆய்வு appeared first on Dinakaran.