×

மல்லிப்பட்டினம் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

தஞ்சை: மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தஞ்சை அருகே ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்தார். மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடூரமான செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். கொலை நடந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிங் கொடுக்கப்படும். மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

The post மல்லிப்பட்டினம் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mallipatnam School ,Thanjay ,Minister ,Anbil Mahesh ,Mallipatnam Government Secondary School ,Tanzai ,
× RELATED தொழிலாளர்கள் பற்றாக்குறையால்...