×
Saravana Stores

ஏஞ்சல் படப்பிடிப்பு விவகாரம்; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.

இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி உதயநிதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், காலதாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், துணை முதல்வர் உதயநிதியின் மனுவை ஏற்றுக்கொண்டு, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post ஏஞ்சல் படப்பிடிப்பு விவகாரம்; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Madras High Court ,CHENNAI ,Udayanidhi ,Films Company ,Ramasaravanan ,OSD ,Court ,Angel ,Dinakaran ,
× RELATED எல்.ஐ.சி. விவகாரம்.. சர்வாதிகாரம் நீண்ட...