- ஆர் கே பெட்டா ஒன்றியம்
- ஆர்.கே. பத்தா
- ஆர்.கே.பேட்டை ஒன்றியக்குழு
- யூனியன் கமிட்டி
- ரஞ்சிதா ஆபாவாணன்...
- தின மலர்
ஆர்.கே.பேட்டை. ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் ரூ.66 லட்சம் செலவில் சாலை வசதி, கட்டிடங்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் வரவு – செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து, ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 2024-2025ம் ஆண்டிற்கான ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.66.12 லட்சம் ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோன்று, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு புதியதாக நீதிமன்றம் கட்டுவதற்காக வருவாய்த்துறை நில அளவீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றக்கோரி, அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தம்மாள் ஆனந்தன், கார்த்திகேயன், ஏ.பி.சந்திரன், கல்விக்கரசி சேகர், தனலட்சுமி காளத்திஸ்வரன், செல்வி சந்தோஷ், பிரமிளா வெங்கடேசன், அம்மு சேகர், உமாபதி, நதியா திருஞானம், சிவகுமார், திருநாவுக்கரசு, நரசிம்மன், ஜமுனா குமாரசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் ரூ.66 லட்சத்தில் வளர்ச்சி பணி குறித்து தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.