- நாலூர்
- கல்லூரி
- பொன்னேரி
- நாலூர் கேசவபுரம்
- Meenjur
- திருவள்ளூர் மாவட்டம்
- கொருக்குப்பேட்டை ரிசர்வ் லைன்
- இன்ஸ்பெக்டர்
- சசிகலா
- உதவி ஆய்வாளர்கள்
- ரகுபதி
- நவீன் குமார்
- கும்மிடிப்பூண்டி ரயில்வே
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் கேசவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ரயில்வே போலீசார் சார்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கொருக்குப்பேட்டை இருப்புப் பாதை ஆய்வாளர் சசிகலா, உதவி ஆய்வாளர்கள் ரகுபதி, நவீன்குமார் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள் கங்காதரன், முகமது மைதீன் மற்றும் போலீசார் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கஞ்சா, போதை பொருள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும், ரயில்வே தண்டவாளங்களை கடத்தல், செயின், செல்போன் பறிப்பு, போன்ற சம்பவங்களை தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் எடுத்துரைத்தனர். மேலும், அவசர உதவி மற்றும் புகார் அளிப்பதற்கான எண்களை மாணவர்கள் குறித்து வைத்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மத்திய ரயில்வே பாதுகாப்பு படை: 139, தமிழ்நாடு ரயில்வே போலீஸ் உதவி எண்: 1512, சைபர் குற்றங்களுக்கு 1930, குழந்தைகள் பாதுகாப்பு: 1098 ஆகிய புகார் எண்கள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வில் ரயில்வே போலீசார் செல்வம், ராஜேஷ், குமரன் மரன் மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள்பலர் கலந்து கொண்டனர்.
The post நாலூர் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு appeared first on Dinakaran.