×

மகா மாரியம்மன் கோயிலில் வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

 

பெரம்பலூர், நவ. 20: பெரம்பலூர் மகா மாரியம்மன் கோயிலில் வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் எடத்தெருவிலுள்ள  மகாமாரியம்மன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும்  வல்லப விநாயகருக்கு நேற்று (19ம் தேதி) சங்கட ஹசதுர்தியை முன்னிட்டு மாலை (6.30) மணியளவில் பால், தயிர், சந்தனம், வாசனைத் திரவியங்கள், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ராஜேஷ் மற்றும் குமார் பூசாரிகள் செய்து வைத்தனர். இதில் பெரம்பலூர் அரணாரை, துறைமங்கலம், எளம்பலூர், விளாமுத்தூர், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்றுச் சென்றனர்.

The post மகா மாரியம்மன் கோயிலில் வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Vallaba Vinayakar ,Maha Mariamman Temple ,PERAMBALUR ,Maha Maryamman ,MAHAMARIAMMAN TEMPLE ,Maha Maryamman Temple ,
× RELATED பெரம்பலூரில் வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்