×

குறுந்தொழில் முனைவோர்கள் கலைஞர் கடன் உதவி திட்டத்தில் பயன்பெறலாம்

 

நாகப்பட்டினம்,நவ.20: xதமிழ்நாடு அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி(தாய்கோ வங்கி) கிளைகளில் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டி (7 சதவீதம்) ரூ.20 லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதனக்கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் அசைய சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படஉள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 65க்கு மிகாமல் இருக்க வேண்டும், புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள், தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிபீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் மற்றும் இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றி கொள்ளலாம். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் குறு நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் தகவல் அறிய பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம் மற்றும் கிளை மேலாளர்(தாய்கோ வங்கி) பப்ளிக் ஆபீஸ் ரோடு, முதல் தளம், வெளிப்பாளையம் நாகபட்டினம் -என்ற முகவரியில் தொடர்பு கொண்டு கலைஞர் கடன் உதவி திட்டத்தில் பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post குறுந்தொழில் முனைவோர்கள் கலைஞர் கடன் உதவி திட்டத்தில் பயன்பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Tamil Nadu Industrial Co-operative Bank ,TAICO Bank ,Department of Small, Small and Medium Enterprises ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய உலோக மிதவை