×

வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய உலோக மிதவை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கடற்கரையில் இன்று காலை உலோகத்தாலான மிதவை கரை ஒதுக்கியது. இந்த மிதவை துறைமுகங்களில் கப்பலுக்கு ஆழமான பகுதியை உறுதிப்படுத்துவதற்காக நிறுத்தப்படுவதாகும். தகவலறிந்ததும் வேட்டைக்காரன்இருப்பு போலீசார் சென்று மிதவையை பார்வையிட்டனர்.

இந்த மிதவை ஏற்கனவே புதுப்பள்ளி கடற்கரையில் ஒதுங்கியது. அதிக எடை இருந்ததால், அதை கைப்பற்றவில்லை. அந்த மிதவை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, இங்கு கரை ஒதுங்கி உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கரை ஒதுங்கி மிதவையை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

The post வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய உலோக மிதவை appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagapattinam district ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய 5 டன் உலோக மிதவை