×

அவதூறு பேச்சு விஎச்பி துணை தலைவருக்கு குற்றப்பத்திரிகை நகல்

சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில், சுமார் 200 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையை போலீஸ் தரப்பில் எஸ்.சி.எஸ், எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் கடந்த அக்டோபர் மாதம் தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் 15 சாட்சிகள், 34 ஆவணங்கள் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஆர்.பி.வி.எஸ்.மணியன் நேற்று ஆஜரானார். அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை டிசம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post அவதூறு பேச்சு விஎச்பி துணை தலைவருக்கு குற்றப்பத்திரிகை நகல் appeared first on Dinakaran.

Tags : VHP ,CHENNAI ,Former ,Vice President ,Vishwa Hindu Parishad ,RBVS Manian ,Ambedkar ,Tiruvalluvar ,Special Government for SCS ,ST ,
× RELATED விஎச்பி விழாவில் சர்ச்சைக்குரிய...