- அலகாபாத்
- உச்ச நீதிமன்றம் கொலீஜியம்
- புது தில்லி
- அலகாபாத் உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- சேகர் குமார் யாதவ்
- விஷ்வ இந்து பரிஷத்
- நீதிபதி
- விஸ்வ இந்து பரிஷத்
- தின மலர்
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர்குமார்யாதவ். கடந்த 8ம் தேதி அன்று விஷ்வ இந்து பரிசத் நடத்திய விழாவில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி சேகர்குமார் யாதவ், பொது சிவில் சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியின் நடத்தை குறித்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு பலர் கடிதம் எழுதியிருந்தனர்.
அதில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர்குமார் யாதவின் முறைகேடான செயல்களை விசாரிக்கவும், அவரிடம் இருந்து அனைத்து நீதித்துறைப் பணிகளையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தி இருந்தனர். நாடாளுமன்றத்திலும் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரி தீர்மானம் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கையெழுத்து வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் முன்பு நீதிபதி சேகர்குமார் யாதவ் ஆஜரானார்.
அப்போது விஎச்பி விழாவில் தனது பேச்சு குறித்து அவர் விளக்கம் அளித்தார். இதுபற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் ஆற்றிய உரையின் செய்தித்தாள் செய்திகளை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது. அவரது பேச்சு விவரங்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விஎச்பி விழாவில் சர்ச்சைக்குரிய கருத்து உச்சநீதிமன்ற கொலிஜியம் முன்பு அலகாபாத் நீதிபதி விளக்கம் appeared first on Dinakaran.