×

மாணவிக்கு பாலியல் தொல்லை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு

திருத்தணி: பள்ளிப்பட்டில் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளிப்பட்டு பேரூராட்சி, ஆஞ்சநேயர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை தொடர்பாக சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து சிறுமியின் தாய் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்தார். அதன்படி டிஎஸ்பி கந்தன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பள்ளிப்பட்டைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் செங்கல்வராயனை கைது செய்தனர். இந்தநிலையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Pokso ,Pallipat ,Sengalvarayan ,Panchayat Union Primary School ,Anjaneyar Nagar, ,Pallipattu Municipality ,
× RELATED திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு