- கோஷ்டி மோதல்
- ஆர்.கே
- திருவள்ளூர் மாவட்டம்
- ஆர். கே. ராஜீவகாந்தி
- வெங்கடேசன்
- ராகவனாயுடுகுப்பம்
- நியூ அருந்ததி காலனி
- கோஷ்டி மோதல்
ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த ராகவநாயுடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ராஜிவ்காந்தி (37). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 24ம்தேதி தனது பெரியப்பாவின் இறப்பிற்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ராகவநாயுடுகுப்பம், நியூ அருந்ததி காலனி பகுதியைச் சேர்ந்த அருண், மதன், கோபி ஆகிய 3 பேரும் மற்றொரு பைக்கில் அதிவேகமாகச் சென்று, ராஜிவ்காந்தியின் பைக் மீது மோதுவதுபோல் வந்துள்ளனர். இதனால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, ராஜிவ்காந்திக்கு ஆதரவாக வல்லரசு, மனோ, கோகுல் ஆகியோரும், அருணுக்கு ஆதரவாக மதன், கோபி, முரளி ஆகியோரும் ஒருவரை ஒருவர் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில், இரு தரப்புக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் ஆர்.கே.பேட்டை எஸ்ஐ ராக்கிகுமாரி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார், ராகவநாயுடுகுப்பம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட முரளி (34), ராஜிவ்காந்தி (37) ஆகிய 2 பேரை கைது செய்து, தலைமறைவான 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post கோஷ்டி மோதலில் 2 பேர் கைது: 6 பேருக்கு வலை appeared first on Dinakaran.