×

வாகனம் நிறுத்துவதில் தகராறு இருதரப்பினர் மோதல்: 2 பேர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்தவர் தீபிகா (41). இவரது வீட்டின் அருகே, கொசப்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்த பூபதி மகன் ராஜேஷ் லோடு ஆட்டோவை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் தீபிகா வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராஜேஷ் லோடு ஆட்டோவை நிறுத்தும் இடத்தில் மணல், ஜல்லியை கொட்டி வைத்துள்ளனர்.

இதனால், இரு தரப்பிற்கும் இடையே கடந்த 23ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டு, இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்ெகாண்டனர். இதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, பூபதி (59) மற்றும் மகேஷ் (32) என இருதரப்பை சேர்ந்த 2 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post வாகனம் நிறுத்துவதில் தகராறு இருதரப்பினர் மோதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Deepika ,Chinnathambi Street, Kosapettai, Otteri ,Rajesh Lodu ,Bhupathi ,Venkatesan Street, Kosapettai ,Dinakaran ,
× RELATED உணவு டெலிவரி நிறுவனங்களின் சலுகை...