×

ரயில் மோதி தொழிலாளி பலி

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டரை பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (38). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மின்சார ரயில் வரதராஜன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வரதராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, வரதராஜன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post ரயில் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Varadarajan ,Thandarai ,Pattabram ,Avadi railway station ,Arakkonam ,Chennai ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் தலை நசுங்கி பரிதாப பலி