×

பெண்களுக்கு தையல் இயந்திரம்: எம்எல்ஏ வழங்கினார்

புழல்: சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 5 ஊராட்சிகளில் தையல் பயிற்சி முடித்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரத்தில் உள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றியக்குழு துணை தலைவருமான கருணாகரன் தலைமை தாங்கினார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் தையல் பயிற்சி முடிந்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுவினர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பெண்களுக்கு தையல் இயந்திரம்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Cholavaram ,Union ,Padianallur ,Nallur ,Old Buffalo Vettipalayam ,New Buffalo Vettipalayam ,Karanodai ,Chennai North East District ,DMK ,Madhavaram ,
× RELATED துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு...