×

ஒன்றிய அரசை கண்டித்து வயநாட்டில் முழுஅடைப்பு..!!

கேரளா: ஒன்றிய அரசை கண்டித்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வயநாடு மாவட்டத்தில் சூரல் மலை, முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வயநாடு நிலச்சரிவை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்காததை கண்டித்தும் நிதி வழங்காததை கண்டித்தும் முழுஅடைப்பு நடைபெறுகிறது. வயநாடு மாவட்டத்தில் பல இடங்களில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசை கண்டித்து வயநாட்டில் முழுஅடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Wayanad ,union government ,Kerala ,Kerala's Wayanad district ,Sural Hill, Mundakai ,Wayanad district ,Union ,Govt National Disaster ,Union Govt ,Dinakaran ,
× RELATED கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது: பினராயி விஜயன்