×

கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது மருத்துவ முகாம்

 

தேனி, நவ. 19: தேனி மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக பெரியகுளம் சரகம் லட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்பாண்டியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனர். இந்நிகழ்ச்சியில் லட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணிசந்திரன் முன்னால் தலைவர் ரெங்கசாமி தேனி மாவட்ட கூப்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ஜெயராம் சங்க பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : General Medical Camp ,Cooperative Credit Union ,Theni ,Periyakulam Charakam Lakshmipuram ,Primary Agricultural Cooperative Credit ,Society ,71st ,All India Cooperative Week ,Devadanapatti Primary Health Center ,General Medical ,Camp ,Dinakaran ,
× RELATED எஸ்.பி.அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி