- மாடம்பாக்கம் ஊராட்சி
- ஜனாதிபதி
- பஞ்சாயத்து
- ஸ்கெட்ச் வெங்கடேசன்
- மாதம்பாக்கம்
- குன்றத்தூர் ஒன்றியம்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- தின மலர்
கூடுவாஞ்சேரி: மாடம்பாக்கம் ஊராட்சியில், மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஸ்கெட்ச் வெங்கடேசனின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது படத்திறப்பு விழா நடந்து. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் ஸ்கெட்ச் வெங்கடேசன். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி ஸ்கெட்ச் வெங்கடேசன் மர்ம கும்பலால் நாட்டு வெடிகுண்டுகள் வீசி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாடம்பாக்கம் பஜார் வீதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அவரது படத்திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில், மாடம்பாக்கம் ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் விமலா ஏழுமலை தலைமை தாங்கி ஸ்கெட்ச் வெங்கடேசனின் உருவப்படத்தை திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவரது மனைவி ஜோதி, மகள்கள் ஷாலினி, சினேகா, சந்தியா, சகோதரர்கள் ஏழுமலை, சக்கரவர்த்தி, ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், அங்குள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திலும், ஸ்கெட்ச் வெங்கடேசன் வீட்டிலும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாத வகையில், மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
The post மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் 2ம் ஆண்டு நினைவு படத்திறப்பு appeared first on Dinakaran.