×

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் 7 நாள் அவகாசம் கேட்கும் பாஜ, காங்.

புதுடெல்லி: ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் குறித்து பதிலளிப்பதற்கு மேலும் 7 நாள் அவகாசம் வேண்டுமென பாஜ, காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை வீதிமீறல்கள் குறித்து பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் புகார் கொடுத்தது. மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி மீது பாஜ புகாரளித்து இருந்தது.

இதனை தொடர்ந்து இரு கட்சிகளின் தலைவர்களும் புகார் குறித்து பதிலளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. பாஜ தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று பிற்பகல் ஒரு மணிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்த நிலையில், இரு கட்சிகளும் புகார் குறித்து பதிலளிப்பதற்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

 

The post தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் 7 நாள் அவகாசம் கேட்கும் பாஜ, காங். appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,New Delhi ,Election Commission ,Jharkhand ,Maharashtra ,Jharkhand, ,
× RELATED வெற்று வாக்குறுதிகள் இனி தேவையில்லை...