புதுடில்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தினசரி அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருவது குறித்த ஊடக அறிக்கையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் பதிவிடுகையில்,மோடி அரசு அறிவித்த புல்லட் ரயில் இன்னும் வரவில்லை. ஆனால் புல்லட் ரயிலின் வேகத்தை விட வேகமாக உயர்ந்து வரும் பணவீக்கம், சாமானியர்களின் முதுகை உடைத்துவிட்டது. பத்தரை ஆண்டுகளில் பணவீக்கம் இரட்டிப்பாகவும் மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளது.
காய்கறிகள், எண்ணெய், மசாலா மற்றும் மளிகை பொருட்கள் சாமானியர்களின் கைக்கு எட்டாதவையாக மாறி உள்ளன. விலைவாசி அதிகரிப்பு என்ற பிரச்னையை எழுப்பி ஆட்சிக்கு வந்தார் மோடி. உருளைக்கிழங்கு முதல் தக்காளி, பால், மசாலா மற்றும் சமையல் எண்ணெய் வரை இப்போது சாமானியர்களின் எட்டா கனவாகியுள்ளது. வாக்குறுதி அளித்த நல்லநாள் இதுதானோ? வெற்று வாக்குறுதிகள் இனி மேல் வேண்டாம், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.
The post வெற்று வாக்குறுதிகள் இனி தேவையில்லை புல்லட் ரயிலை விட வேகமாக அதிகரிக்கும் பணவீக்கம்: பாஜ அரசு மீது காங். விமர்சனம் appeared first on Dinakaran.