×

வெளிநாட்டவருக்கு மரணதண்டனை: சவுதி அரேபியாவின் செயலை மனித உரிமை அமைப்புகள் விமர்சனம்!!

ரியாத்: 2024ம் ஆண்டில் 100க்கு மேற்பட்ட வெளிநாட்டவருக்கு சவுதி அரேபியா அரசு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. மரணதண்டனை விதிப்பதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 34 வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா அதிக எண்ணிக்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியாவுக்கு போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு நஜ்ரானின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2024ல் இதுவரை 101 வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2023 மற்றும் 2022ஐ ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு அதிகம் என கூறப்படும் நிலையில், மனித உரிமை அமைப்புகள் இதனை விமர்சித்து வருகின்றன. 2023ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அறியப்படுகிறது. மேலும், 2024ல் இதுவரை சவுதி அரேபியா மொத்தமாக 274 பேர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.

The post வெளிநாட்டவருக்கு மரணதண்டனை: சவுதி அரேபியாவின் செயலை மனித உரிமை அமைப்புகள் விமர்சனம்!! appeared first on Dinakaran.

Tags : Organizations ,Saudi Arabia ,Riyadh ,Rights Organizations ,Saudi ,Dinakaran ,
× RELATED பயணிக்கு உடல்நல பாதிப்பு டெல்லி விமானம் பாக்.கில் தரையிறக்கம்