×

பயணிக்கு உடல்நல பாதிப்பு டெல்லி விமானம் பாக்.கில் தரையிறக்கம்

கராச்சி: டெல்லியில் இருந்து சவுதிக்கு புறப்பட்ட விமானம் மருத்துவ உதவி காரணமாக பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  இன்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 6இ 63 விமானம் நேற்று தலைநகர் டெல்லியில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது. பாகிஸ்தான் நாட்டின் வான்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஆண் பயணி ஒருவருக்கு கடும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவருக்கு விமானத்தில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத காரணத்தால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் இன்டிகோ 6இ 63 விமானம் தரையிறக்கப்பட்டது. அவரின் உடல்நலம் சற்று தேறியது. இதையடுத்து அந்த விமானம் கராச்சியில் இருந்து டெல்லிக்கு திரும்பி வந்தது. அங்கு வந்தவுடன் உடல்நலம் பாதித்த ஆண் பயணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

The post பயணிக்கு உடல்நல பாதிப்பு டெல்லி விமானம் பாக்.கில் தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Pakistan ,Karachi ,Saudi Arabia ,Jeddah, Saudi Arabia ,Pakistan's… ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு