×

திருவள்ளூர் அருகே தலைகுப்புற கவிழ்ந்து கார் விபத்து

 

திருவள்ளூர், நவ. 18: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த கோழி வியாபாரியான பார்த்திபன் என்பவர் காரில் ஆவடி வரை சென்றுவிட்டு மீண்டும் சோளிங்கர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் பகுதியில் நேற்று காலை கார் வந்தபோது பார்த்திபன் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார்.

இதனால் சாலையோரமாக இருந்த டெலிபோன் கம்பத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக் மீது மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்ட பார்த்திபன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

The post திருவள்ளூர் அருகே தலைகுப்புற கவிழ்ந்து கார் விபத்து appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Parthiban ,Solingar, Ranipet district ,Solingar ,Avadi ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!