×

புதுக்கோட்டையில் வாக்காளர்பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம்

 

புதுக்கோட்டை, நவ.18: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 1561 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்று வருகிறது. இதேபோல் மேலும், இம்முகாம்கள் வருகிற 23ம்தேதி, 24ம்தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-லும், நீக்கம் செய்ய படிவம் 7-லும், திருத்தம் மற்றும் இட மாற்றம் செய்ய படிவம் 8-லும், அதற்குரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் திமுக பாக முகவர்கள் இந்த பணியை மேற்கொண்டனர். இந்த பணியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் சென்று அந்ததெந்த பகுதியில் கட்சியினர் செய்யும் பணியை ஆய்வு செய்தார். ஆய்வில் தலைமை கழகம் வழங்கிய ஆலோசனைகளை தெரிவித்து முறையாக வரும் வாரங்களில் தொய்வு இன்றி பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர்
செல்வம், பாக முகவர்கள், கிழை கழக செயலாளர் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் வாக்காளர்பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Election Commission of India ,Pudukottai… ,Dinakaran ,
× RELATED கொலை, கொள்ளை குற்றம் சாட்டப்பட்ட...