×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு நேர்முக தேர்வு

 

நாகப்பட்டினம்,நவ.18: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 19 விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 25ம்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 2ம்தேதி வரை வேளாங்கண்ணி ரோடு, பாப்பாக்கோவில், சர் ஐசக் நீயூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நேர்காணல் நடைபெறவுள்ளது. எனவே, நேர்முகத் தேர்விற்கான அனுமதி சீட்டினை இன்று (18ம்தேதி) முதல் நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணைய தளத்தின் வழி https://www.drbngt.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் விண்ணப்பதாரர்கள் ngtdrb2024@gmail.com என்ற இமெயில் மூலமும், உதவி மைய தொலைபேசி எண் 04365 253105 வாயிலாகவும் நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு நேர்முக தேர்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam District ,Nagapattinam ,Registrar ,Cooperative Societies ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய உலோக மிதவை