×

திருவொற்றியூர் பகுதியில் இறைச்சி கூடம் அமைக்க வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. இதன் உரிமையாளர்கள் ஆட்டு இறைச்சிகளை புளியந்தோப்பில் உள்ள இறைச்சி கூடத்தில், மாநகராட்சி முத்திரையுடன் வாங்கி வந்து, தங்களது கடைகளில் விற்க வேண்டும். ஆனால் திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் போக்குவரத்து நெரிசல், மற்றும் நீண்ட தூர அலைச்சல் போன்ற பிரச்னைகளால் புளியந்தோப்பில் உள்ள இறைச்சி கூடத்திற்கு சென்று வர முடியாத நிலை உள்ளது.

இதனால், தாங்களாகவே சொந்தமாக ஆட்டு இறைச்சி விற்று வருகின்றனர். இவ்வாறு விற்கப்படும் இறைச்சிகளை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து, அவர்களுக்கு அபராதம் இருக்கின்றனர். இதனால், தங்களது வருவாய் அனைத்தும் அபராத்திற்கு சென்று விடுகிறது என வியாபாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருவொற்றியூரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி வியாபாரிகள் நேற்று முன்தினம் மண்டல அலுவலகத்திற்கு வந்து, மாநகராட்சி அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அபராதம் விதிப்பதாகவும், 2000 ரூபாய் பெற்றுக் கொண்டு 1000 ரூபாய்க்கு மட்டுமே அபராத ரசீது தருகிறார்கள் என்றும், புளியந்தோப்பில் சென்று ஆட்டு இறைச்சிகளை வாங்கி வந்து விற்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால், தங்களது தொழில் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி குடும்பம் சிரமப்படுகின்றன.

எனவே திருவொற்றியூரில் மாநகராட்சி சார்பில் ஆடு இறைச்சி கூடம் அமைத்து தர வேண்டும் என்று மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, கோரிக்கை விடுத்து இதற்கான மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், விரைவில் திருவொற்றியூரில் இடம் தேர்வு செய்து அங்கு மாநகராட்சி சார்பில் ஆட்டு இறைச்சிக்கூடம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

The post திருவொற்றியூர் பகுதியில் இறைச்சி கூடம் அமைக்க வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,Tiruvottiyur ,Pulianthop ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூர் சாலையோரம் ஏடிஎம்...