×

தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 சதவீதத்தை தமிழகத்திற்கே ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும்: நிதி ஆணையத்துக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில் நிதிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதேபோல், செஸ் மற்றும் கூடுதல் தீர்வைகளை வசூலிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசும், நிதி ஆணையமும் கருதினால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பகிர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நிதி ஆணையக் குழுவிடம் இதை தமிழக அரசு உறுதியாக வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 சதவீதத்தை தமிழகத்திற்கே ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும்: நிதி ஆணையத்துக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Anbumani ,Finance Commission ,CHENNAI ,PAMC ,president ,Dinakaran ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...