×

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு: மருத்துவ ஆலோசனை குழு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் காலி இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு விட்டன. கடந்த 5ம் தேதியுடன் இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் விடுபட்ட மருத்துவப் படிப்பு இடங்களில் சேருவதற்கான சிறப்பு கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பொது சுகாதார சேவைகள் இயக்குனரகத்தின் கீழ் வரும் மருத்துவ ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கு வருகிற 20ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் கலந்தாய்வு நடக்கிறது. அதில் இடங்களை தேர்வு செய்பவர்கள் அந்த படிப்புகளில் சேருவதற்கு வருகிற 30ம் தேதி கடைசி நாள் ஆகும். இதேபோல், மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் விடுபட்ட மருத்துவப் படிப்பு இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு வருகிற 25ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

அதில் இடங்களை எடுக்கும் மாணவ-மாணவிகள் அந்தந்த கல்லூரிகளில் அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் சேர வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அன்னை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் புதிதாக வந்துள்ளன. இத்துடன் மொத்தம் 57 எம்.பி.பி.எஸ்., 28 பி.டி.எஸ். இடங்களுக்கு இந்த சிறப்பு கலந்தாய்வு நடக்க உள்ளது.

The post எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு: மருத்துவ ஆலோசனை குழு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MBBS ,BDS ,CHENNAI ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED மாநில மருத்துவக் கல்வி மேலாண்மை...