×

ஒன்றிய அரசை கண்டித்து துண்டுபிரசுரம் விநியோகம்

 

திருவாரூர், நவ. 17: பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல், மதவெறி, ஊழல், சுயநல அரசியல், கொலை, கொள்ளை, மோசடி, வன்முறை, தாராளமயம், புதிய பொருளாதார கொள்கை, பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வு கண்டித்து, திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. அதன்படி, திருவாரூர் நகர் பகுதியில் நகர செயலாளர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதேபோல் ஒன்றிய பகுதிகளில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கமானது நடைபெற்ற நிலையில் திருவாரூரில் ஒன்றிய செயலாளர் சுந்தரய்யா தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனும், குடவாசல் தெற்கு ஒன்றியத்தில் லெனின் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கதை மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தியும் நிறைவு செய்தனர்.

குடவாசல் வடக்கு ஒன்றியத்தில் அன்பழகன், கொரடாச்சேரியில் கோபிராஜ், வலங்கைமானில் சண்முகம், நீடாமங்கலத்தில் ஜான்கென்னடி தலைமையில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து துண்டுபிரசுரம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : EU government ,Thiruvarur ,BJP ,LED UNION STATE ,THIRUWARUR ,Union Government ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...