×
Saravana Stores

மீண்டும் சர்ச்சை ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஒப்பீட்டு கவிதை நோக்கில் ஆய்வு செய்யும் பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாசர், யோகி வேமனா ஆகிய மூவரின் மொழியியல் மற்றும் இலக்கிய திறன் குறித்து கலந்தாலோசனை நடந்தது. இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘பாரத் என்பது இந்தியாவை விட வேறுபட்டது.

ஐரோப்பியர்கள் தான் இந்தியா என அழைத்தனர். பாரத் என்பது பழையது, மிக பெரியது. ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்பு வேறு விதமாக இருந்தது’’ என்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த கருத்தரங்கிற்கான அழைப்பிதழில் திருவள்ளுவரின் படம் காவி உடையுடன் அச்சிடப்பட்டிருந்து.

இதற்கு பல்வேறு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை திருவள்ளுவரை ஆளுநர் மாளிகை பதிவிட்டு, சர்ச்சையில் சிக்கியது. பலத்த எதிர்ப்புக்கு பின் காவி உடையுடன் பதிவிட்ட வள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை நீக்கியது.

The post மீண்டும் சர்ச்சை ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar ,Governor ,House ,CHENNAI ,Poetry ,Governor's House ,Guindy, Chennai ,Kabir Dasar ,Yogi Vemana ,
× RELATED ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும்...