- தர்ணா
- ஈன்வாரிய ஓய்வுபெற்ற பெற்றோர் நலச் சங்கம்
- ஈரோடு
- தமிழ்நாடு சக்தி வாரியம் ஓய்வு பெற்றோர்
- ஈரோடு, ஈ.வி.என்
- சக்தி வாரியம்
- கே.குப்புசாமி
ஈரோடு, நவ. 16: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஈரோடு, ஈ.வி.என். சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்ட த்துக்கு, கிளை தலைவர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். மத்திய அமைப்பு மண்டல செயலாளர் ஜோதிமணி, கிளை பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீதேவி, குழந்தைசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில், ஓய்வு கால பணப்பயன்களை வழங்கிட வேண்டும். கடந்த, 2003க்கு பின் பணியில் சேர்ந்து பணி ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றிய காலத்தை கணக்கீடு செய்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை வாரியமே எடுத்து நடத்த வேண்டும்.
நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, அரசாணை 100 முத்தரப்பு ஒப்பந்தத்தை அமலாக்க வேண்டும். விதவை, விவாகரத்து பெற்றவர்களுக்கு வழங்கி வந்த ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.20 லட்சத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காலமானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், சி.பி.எஸ். திட்டத்தில் உள்ளவர்களுக்கும் காலதாமதம் செய்யாமல் சி.பி.எஸ். தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த தர்ணாவில் திரளான மின்வாரிய ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.
The post மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தினர் தர்ணா appeared first on Dinakaran.