×

கோவையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு

கோவை: கோவை கணபதி பகுதியில் துக்க வீட்டில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். துக்க வீட்டில் மின்சாரம் இல்லாததால், உடல் வைக்கப்பட்டு இருந்த ப்ரீசர் பாக்ஸுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தரப்பட்டது. ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் புகை மண்டலமானது. தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி ஆசிரியை பத்மாவதி (53) உயிரிழந்துள்ளார்.

The post கோவையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ganapati ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி