×
Saravana Stores

மருத்துவருக்கு கத்திக்குத்து எதிரொலி : ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம்!!

சென்னை :அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து எதிரொலியாக உள் நோயாளிகளின் உடன் வருபவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வார்டில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நபருக்கு டேக் வழங்கப்பட்டு அதில் நோயாளியின் பெயர், பார்வையாளரின் பெயர், வார்டு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. டேக் உள்ளவர்கள் மட்டுமே தற்போது மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோருக்கு 4 நிறங்களில் டேக் நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

*சிவப்பு நிறம் தீவிர சிகிச்சை பிரிவு
*மஞ்சள் நிறம் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு
*பச்சை நிறம் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு
*நீல நிறம் பொது மருத்துவம்

The post மருத்துவருக்கு கத்திக்குத்து எதிரொலி : ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம்!! appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Hospital ,Chennai ,Artist Century Government Hospital ,Kindi, Chennai ,Dinakaran ,
× RELATED மருத்துவர் பாலாஜி கத்தியால்...