×

அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற கட்டிடம் திறப்பு

விகேபுரம், நவ.14: விகேபுரம் கட்டப்புளி கீழத்தெருவில் உள்ள பறையர் சமுதாயத்திற்குட்பட்ட அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் விகேபுரம் நகர திமுக துணைச் செயலாளரும், 4வது வார்டு கவுன்சிலருமான செல்வக்குமாரி கட்டிடத்தை திறந்து வைத்தார். தொழிலதிபர் ரமேஷ் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், நகர திமுக செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அயன் சிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அருள்மணி, சாரதா, ராமலட்சுமி, விக்னேஷ், குட்டி கணேசன், ஏசு ராஜா, ஊர் தலைவர் வினோத், செயலாளர் சுரேஷ், உப தலைவர் மகேந்திரன், முன்னாள் மன்ற பொருளாளர் அந்தோணிசாமி, திமுக மாவட்ட கலை இலக்கிய அமைப்பாளர் நெடுஞ்செழியன், மதிமுக நகர துணைச் செயலாளர் ஜெலஸ்டீன், திமுக நகர அவைத் தலைவர் அதியமான், பொருளாளர் ரவி, ராஜேந்திரன், முத்துராமலிங்கம், சிற்றரசன், மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Youth Welfare ,Council Building ,Vikepuram ,Ambedkar Youth Welfare Society ,Paraiyar ,Vikepuram City DMK ,Deputy Secretary ,4th Ward Councillor ,
× RELATED ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்