×

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிடமாடல் அரசின் இலக்காகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்” என தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,KKSSR Ramachandran ,CHENNAI ,
× RELATED முதல்வரை மக்கள் பாராட்டுவதை பொறுக்க...