×

வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம்.. ஜனநாயகத்தின் தீர்ப்பு நாள் இன்று: பிரியங்கா காந்தி பதிவு..!!

வயநாடு: வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம் என்று காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, வயநாட்டின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்தது.

இதன்படி வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது . இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். வயநாட்டு தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடியை பார்வையிடுகிறார்.

இந்நிலையில், இந்தத் தேர்தல் குறித்து காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; வயநாட்டில் உள்ள என் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் இதயப்பூர்வமான நன்றி. இன்று ஜனநாயகத்தின் தீர்ப்பு நாள். நீங்கள் அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள். வாக்கு மூலம் நீங்கள் எடுக்கும் நிலைப்பாடுதான் நமது ஜனநாயகத்தின் பலம். வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம் என தெரிவித்துள்ளார்.

The post வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம்.. ஜனநாயகத்தின் தீர்ப்பு நாள் இன்று: பிரியங்கா காந்தி பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Priyanka Gandhi ,Congress ,Rahul Gandhi ,Wayanad Lok Sabha ,Kerala ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான...