×
Saravana Stores

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில், 115 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி கடந்த 2001ம் ஆண்டு கலைஞர், மு.க.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்ய ஒப்புதல் வழங்கி 2005ம் ஆண்டு சபாநாயகரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு 2006ல் திரும்பப் பெறப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்வதற்கான அனுமதியை திரும்பப் பெற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ராம், அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க கோரி மனுதாரர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர் செலுத்திய ஒரு லட்சம் ரூபாயை திரும்ப வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. Stalin ,Minister ,Goldilocks ,Chennai ,Dimuka ,K. Stalin ,Department of Bribery ,Blonde Insiders ,Dinakaran ,
× RELATED தடைகள் வந்த போதெல்லாம் தாயுமானவராய்...