×

நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

நாகப்பட்டினம்,நவ.13: நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அண்ணாசாமி வரவேற்றார். பொருளாளர் சிங்காரவேலு வரவு செலவு அறிக்கையை வாசித்தார். 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கொடுத்து வரும் குடும்ப நல பாதுகாப்பு நிதி ரூ.80 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு கொடுக்கும் தொகையை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஒன்றிய அரசு வழங்குவது போல் மாநில அரசும் ரு.1000 மருத்துவப்படி வழங்க வேண்டும். கிஙிசிஞி என்று பிரிக்காமல் அனைத்து ஓய்வூதியகளுக்கும் ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam District Retired Officers Association Executive Committee Meeting ,Nagapattinam ,Nagapattinam District ,Retired Officers ,Association ,Executive ,Committee ,Kaliamoorthy ,District Secretary ,Annasamy ,Treasurer ,Singharavelu ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய உலோக மிதவை