×

கொள்கையற்ற குழப்பவாதி விஜய் அரசியலில் சாதிப்பது கடினம்: எச்.ராஜா தாக்கு

சென்னை:திருத்தணி முருகன் கோயிலில் பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விபூதி, பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து மலைக்கோயில் மாட வீதியில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘வக்பு போர்டு சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கும் இந்து எதிர்ப்பு கட்சிகளை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கட்சி கொள்கைகளை தெளிவுபடுத்தாமல் குழப்பவாதியாக உள்ளார். அவர் அரசியலில் சாதிப்பது என்பது கடினம். பாஜவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுடனே தனக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறாமல் இருந்தால் சரி’’ என்றார்.

The post கொள்கையற்ற குழப்பவாதி விஜய் அரசியலில் சாதிப்பது கடினம்: எச்.ராஜா தாக்கு appeared first on Dinakaran.

Tags : Vijay ,H. Raja Thaku ,Chennai ,BJP ,H. Raja ,Swami ,Thiruthani Murugan temple ,Vibhuti ,Prasad ,H.Raja ,Road ,H.Raja Thakku ,
× RELATED விஜய் திவாஸ் தினம்: வெற்றிப் போர்...