×

அயோத்தி ராமர் கோயிலுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல்

அயோத்தி: அயோத்தியில் உள்ள ராமர் ேகாயிலை தாக்கப்போவதாக காலிஸ்தான் ஆதரவுத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். நவ.16 மற்றும் 17ல் அயோத்தி ராமர் கோயிலில் ரத்தக்களறி ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த வீடியோவில் அவர் எச்சரித்தார். நவ.18ல் ராம் விழா கொண்டாட்டத்திற்காக முதல்வர் யோகி அங்கு செல்ல உள்ள நிலையில் இந்த மிரட்டல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள், உபி சிறப்பு படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

The post அயோத்தி ராமர் கோயிலுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Khalistan ,Ram ,temple ,Ayodhya ,Gurpadwant Singh Pannoon ,Ram temple ,Ayodhya Ram Temple ,Ayodhya Ram ,
× RELATED அயோத்தியில் கோலாகலம் ராமர் கோயில்...