×

10 ரூபாய் தகராறில் ஆத்திரம்: மாஜி ஐஏஎஸ் அதிகாரியை பஸ்சில் தாக்கிய கண்டக்டர்; ராஜஸ்தானில் பரபரப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராம்தன் லால் மீனா. 75 வயதான இவர் கடந்த 10ம் தேதி ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் இருந்து புறநகரில் கனோட்டா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பஸ்சில் பயணம் செய்தார். அவர் பஸ்சில் கண்அயர்ந்து தூங்கி விட்டார். முழித்து பார்த்த போது பஸ், அவர் இறங்கும் கனோட்டா ஸ்டாப்பை தாண்டி சென்று கொண்டு இருந்தது. உடனே பஸ்சை நிறுத்த ராம்தன் லால் மீனா, கண்டக்டர் கன்ஷ்யாம் சர்மாவிடம் கோரினார். ஆனால் பஸ்சை நிறுத்தாமல், அடுத்த ஸ்டாப்பில் நிறுத்த கூடுதலாக ரூ.10 கேட்டார்.இந்த தகராறில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராம்தன்லால்மீனாவை கண்டக்டர் பஸ்சில் இருந்து மிதித்து தள்ளினார். இதுகுறித்து போலீசில் கண்டக்டர் மீது ராம்தன்லால் மீனா புகார் கொடுத்தார். இதையடுத்து கண்டக்டர் கன்ஷ்யாம் சர்மா மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 115 (2) (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 126 (2) (தவறான கட்டுப்பாடு) மற்றும் 351 (2) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் கனோடா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பஸ்கண்டக்டர் கன்ஷ்யாம் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post 10 ரூபாய் தகராறில் ஆத்திரம்: மாஜி ஐஏஎஸ் அதிகாரியை பஸ்சில் தாக்கிய கண்டக்டர்; ராஜஸ்தானில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : IAS ,Rajasthan ,Jaipur ,Ramdan Lal Meena ,SMS Hospital ,Kanota ,
× RELATED லிவ் இன் ஜோடிகள் விவரங்களை பதிவு செய்ய...